கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி மிரிஹானையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது, பேருந்தொன்றுக்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குற்றப்புலனாய்வு பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் தெரணியகலை பகுதியைச் சேர்ந்தவராவார்.
அவர் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும், விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றுபவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
Be First to Comment