முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட பாண்டியன்குளம் பகுதியில் கிணற்றுக்குள் தொங்கிய நிலையில், குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அதே இடத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 65 வயதுடைய ஐயாத்துரை துரைரட்ணசிங்கம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் நீண்ட காலமாக தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நட்டாங்கண்டல் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
முல்லைத்தீவில் கிணற்றுக்குள் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment