யாழ் மாநகரசபையை கலைக்க வேண்டிவருமென நான் கூறவில்லை! வடக்கு ஆளுநர்
By admin on May 19, 2022
ஆரிய குளத்தில் இராணுவத்தினர் வெசாக் கூடு அமைப்பதற்கு அனுமதி கொடுக்காவிட்டால் யாழ் மாநகரசபையை கலைக்க வேண்டிவரும் என எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட வடக்கு ஆளுநர், ஆரியகுளம் பகுதி விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் வினவிய போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ் மாநகர சபை விடயம் தொடர்பில் நான் தற்போது பேச விரும்பவில்லை.
எனினும் நான் மாநகர சபையை கலைப்பதாக யாரிடமும் கூறவில்லை.
எனவே அந்த விடயம் தொடர்பில் நான் பேச வேண்டிய தேவை இல்லை எனவும் தெரிவித்தார்
Be First to Comment