இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 30 இலட்சம் ரூபா நிதியை வழங்கியுள்ளனர்.
இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக முதலமைச்சர் நிவாரண நிதி, நன்கொடைகளை வழங்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான, டீ.ஆர்.பாலு மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வரை சந்தித்துள்ளனர்.
இதன்போது, திராவிட முன்னேற்றக் கழக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமான 30 லட்சம் ரூபாவுக்கான காசோலையை அவர்கள் தமிழக முதல்வரிடம் கையளித்துள்ளதாக இந்திய ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
Be First to Comment