முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
உரிய நேரத்துக்கு சேவைகளை வழங்க எரிபொருள் கிடைக்காமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியும், உரிய தீர்வு வழங்கப்படவில்லை என தெரிவித்தே பணி பகிஸ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
பணி பகிஸ்கரிப்பு காரணமாக பொதுமக்கள் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிப்புக்களை
எதிர்கொண்டுள்ளனர்.
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறவுள்ள நிலையில் போக்குவரத்துச் சேவை உரிய ஒழுங்குமுறைப்படி இயங்குவதற்கான
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட போதிலும், முல்லைத்தீவு சாலையில் பேருந்துகளுக்கு எரிபொருள் சரிவர
கிடைப்பதில்லை என முல்லைத்தீவு சாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் பிரச்சினை: முல்லைத்தீவில் இ.போ.ச ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு!
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment