மேலும் 9 அமைச்சரவை அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர்.
இந்நிகழ்வு கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இடம்பெற்றது.
இதன்போது, நிமல் சிறிபால டி சில்வா துறைமுகம், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சராகவும்
சுசில் பிரேம ஜயந்த கல்வி அமைச்சராகவும்
கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகவும்
விஜேமதாஸ ராஜபக்ஷ நீதி, சிறைச்சாலை விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராகவும்
ஹரின் பெர்னாண்டோ சுற்றுலா மற்றும் காணி அமைச்சராகவும்
மனுஷ நாணயக்கார தொழில் மற்றும் வெளிவிவகார அமைச்சராகவும்
நளின் பெர்னாண்டோ வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சராகவும்
டிரான் அலஸ் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகவும் பதவியேற்றனர்.
Be First to Comment