யாழ்ப்பாண சிறைச்சாலையில் “காத்திருப்போர் மண்டபம்” திறந்து வைப்பு!
“சிறைக் கைதிகளும் மனிதர்களே” எனும் தொனிப் பொருளில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் உள்ள தமது உறவுகளை பார்வையிட வரும் மக்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் காத்திருப்போர் மண்டபம் ஒன்று இன்றைய தினம் யாழ்ப்பாண சிறைச்சாலை முன்றலில் திறந்து வைக்கப்பட்டது
நீண்ட காலமாக யாழ் சிறைச்சாலையில் உள்ள தமது உறவுகளை பார்வையிட வரும் உறவுகள் வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைகாணப்பட்டது யாழ்ப்பாண சிறைச்சாலை அத்தியட்சகரினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் காத்திருப்போர் மண்டபம் ஒன்றுஅமைத்து தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க
யாழ்ப்பாணபோதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி அவர்களின் முயற்சியால் அறக்கட்டளை நிதியம் ஒன்றின் நிதிப் பங்களிப்பில் காத்திருப்போர் மண்டபம் இன்றைய தினம் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது
குறித்த நிகழ்வில் சமாதானத்தை வலியுறுத்தி சமாதானப் புறாவும் பறக்கவிடப்பட்டது
யாழ்ப்பாண சிறைச்சாலை முன்றலில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் Sk நாதன் நாதன் அறக்கட்டளை நிதியத்தின் இயக்குனர் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் மற்றும்
யாழ்ப்பாண சிறைச்சாலையின் அத்தியட்சகர்கெ வி ஏ உதயகுமார, யாழ்ப்பாண சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் ஏச் எம் கேரத், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள்கலந்து கொண்டிருந்தனர்
Be First to Comment