எரிபொருளை ஏற்றிக்கொண்டு மேலும் மூன்று கப்பல்கள் 10 நாட்களில் நாட்டின் துறைமுகத்தை அடையவுள்ளதாக எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டீசல்களை ஏற்றிக்கொண்டு இரு கப்பல்களும் பெற்றோலை ஏற்றிக்கொண்டு ஒரு கப்பலும் வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே எரிபொருள்களை தட்டுப்பாடின்றி வழங்க முடியும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இரண்டு கப்பல்களில் டீசல் மற்றும் பெற்றோல் இறக்கப்பட்டு வருகின்றது. இந்தப் பணிகள் முடியும்வரை மற்றுமொரு கப்பலில் உள்ள பெற்றோலை இறக்க முடியாது. எனினும் அந்தக் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Be First to Comment