மதமாற்றமும் ஒரு திட்டமிட்ட இனவழிப்பே எனும் கருப்பொருளில் உருத்திர சேனை அமைப்பால் நேற்று சனிக்கிழமை யாழ்.நகரப் பகுதியில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
பிரசுரத்தில் தமிழர் தாயகம் எங்கும் உள்ள சைவ மக்களை மதம் மாற்றி தமிழர் வாழ்வியலையும் பண்பாடுகளையும் வழிபாட்டு முறைகளையும் ஒழிப்பதன் மூலம் இந்த நாட்டில் தமிழ் மக்களை
ஆணிவேர் அறுந்த மரம்போல் ஆக்கி இல்லாதொழிக்கும் திட்டத்தினையே மதம் மாற்றிகள் செய்து வருகின்றனர். இதற்கு இலங்கை தமிழ் மக்கள் இனிமேலும் இடம் கொடுக்ககூடாது.
எமது இன அடையாளங்களான தமிழ், சைவம், தமிழர் பாரம்பரிய கலாச்சாரம் என்பவற்றை விட்டுக்கொடுக்காது கடைப்பிடித்து தூய தமிழர்களாக வாழ்வோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Be First to Comment