யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள விற்பனை நிலையம் ஒன்று இன்று அதிகாலை தீப்பற்றி எரிந்து முற்றாக சேதமடைந்தது.
இன்று அதிகாலை 2.30 மணிளவில் விற்பனை நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவி கடை முழுவதும் பரவி முழுமையான சேதத்தை ஏற்படுத்தியது.
இதனையடுத்து தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக யாழ் மாநகர சபை தீயணைப்பு படை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
விற்பனை நிலையம் தீப்பற்றி எரிந்தமை தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Be First to Comment