நாட்டின் சுகாதாரத்துறை வீழ்ச்சியடைந்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய மருந்துகள் இல்லாத காரணத்தினால், சத்திரசிகிச்சைகள் மற்றும் அவசர சிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் போராட்டங்கள் மேலும் அதிகரிக்கும் என்றும், எதிர்வரும் வாரங்களில் மக்கள் தெருக்களில் இறங்கி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய அரசாங்கம் புதிதாக சிந்தித்து எதிர்காலத்தில் ஏற்படும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் பிரதமர் அண்மையில் வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகளுக்கு பிரதமரின் ஊக்கமற்ற வார்த்தைகள், சுற்றுலாத் துறையில் நாடு நம்பிக்கை வைக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டுப் பணம் அனுப்புதல், ஏற்றுமதி வருமானம், வெளிநாட்டுக் கடன்கள், நன்கொடைகள் மற்றும் நாட்டின் நிதி நிலையின் ஒட்டுமொத்த ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்கு மேலதிகமாக வருமானத்தை ஈட்டுவதற்கான ஒரு முறை சுற்றுலாத் துறையாகும்.
இவ்வாறான கருத்துக்களை வெளியிடும் போது சுற்றுலாத்துறை மூலம் எவ்வாறு வெளிநாட்டு வருமானத்தை உருவாக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.
Be First to Comment