யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை – பொலிகண்டியை பிறப்பிடமாக கொண்ட ஈழத்து எழுத்தாளர் தெணியான் தமது 80ஆவது வயதில் இன்று காலமானார்.
கந்தையா நடேசு என்ற இயற்பெயரை கொண்ட அவர் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக பல சிறுகதைகள், நாவல்கள், விமர்சன கட்டுரைகள் என்பவற்றை எழுதி வந்துள்ளார்.
1964இல் ‘விவேகி’ சிற்றிதழில் வெளிவந்த ‘பிணைப்பு’ எனும் சிறுகதையுடன் அவரது எழுத்துலகப் பிரவேசம் ஆரம்பமானது.
சுமார் 150 சிறுகதைகள், 30 கவிதைகள், 8 நாவல்கள், 3 குறுநாவல்கள், 100க்கும் மேற்பட்ட விமர்சன கட்டுரைகள் என்பனவற்றை அவர் எழுதியுள்ளார்.
ஆரம்ப காலத்தில் அவர் பதுளை மாவட்டத்திலுள்ள பல பாடசாலைகளில் ஆசிரியராகவும் பணியாற்றியிருந்தார்.
Be First to Comment