Press "Enter" to skip to content

தேடப்படும் பெண்

கடந்த 9ஆம் திகதி திவுலபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் தீ வைத்து தாக்குதல் நடத்தியமை தொடர்பில் சி.ஐ.டியினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் முக்கிய சந்தேக நபரான பெண் ஒருவரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். சமூக ஊடகங்களில் தோன்றிய பெண் அலுவலகத்தைத் தாக்கி தீவைக்க முன்வந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் அடையாளம் காணப்பட்ட பெண் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கின்றனர்.

எனவே இப் பெண் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு 071 859 4949 அல்லது 071 419 66 09 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *