பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ராஜினாமா
By admin on May 23, 2022
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய ஜகத் அல்விஸ் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளார்.
இன்று காலை குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் சுமார் ஒன்பது மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே அவரிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் வாக்குமூலம் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Be First to Comment