இன்று முதல் நாளாந்த மின்சாரத் தடையானது மூன்று மணிநேரம் அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறுகின்றமையினால், மின்வெட்டு காலம் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரான ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, தெரிவுச் செய்யப்பட்ட அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் மதியம் முதல் மாலை 6.30 மணி வரை இரண்டு மணித்தியாலமும் 10 நிமிட மின்வெட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு நகர வர்த்தக வலயங்கள் மற்றும் கைத்தொழில் வலயங்களுக்கு காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை மூன்று மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
Be First to Comment