வாகனங்களுக்கான எரிபொருள் விநியோக வரையறைகளில் இன்று முதல் அமுலாகும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்று வரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, மோட்டார் சைக்கிள்களுக்கு 2,500 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவுக்கும் சகல எரிபொருள் நிலையங்களிலும் எரிபொருள் விநியோகிக்கப்படும்.
அதேநேரம், கார் மற்றும் வான் ஆகியனவற்றுக்கு 10,000 ரூபாவுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்படும்.
பேருந்துகள் மற்றும் ஏனைய வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வாகனங்களுக்கு இந்த மட்டுப்பாடுகள் இல்லை என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகத்தில் வரையறை!
More from UncategorizedMore posts in Uncategorized »
- பருத்தித்துறையில் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் !
- பட்டதாரிகளின் கனவுகளுக்கு அரசு உயிர் கொடுக்குமா? யாழில் பட்டதாரி அங்கிகளை அணிந்தவாறு கவனயீர்ப்பு..!
- மன்னார் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி
- சீமெந்தின் விலையை குறைக்க தீர்மானம்
- கொழும்பு பங்குச் சந்தையில் வளர்ச்சி!
Be First to Comment