Press "Enter" to skip to content

கிளி. பொலிசார் தாக்கியதாக கூறி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் 24.05.2022 இன்றைய தினம் எரிபொருள் நிரப்புவதற்காக வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதி மீது பொலிசார் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோத மண் அகழ்வு ஈடுபட்டதாக கூறி கல்லாற்று பிரதான வீதியில் வைத்து தாக்கியதாக தெரிவித்து சாரதி தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக டிப்பர் வாகன உரிமையாளர் தெரிவிக்கையில்,
தனது டிப்பர் வாகனம் எரிபொருள் நிரப்புவதற்காகவே தனது வீடு நோக்கி வந்ததாகவும், வீதியில் சென்ற பொலிசார் டிப்பர் சாரதியை சரமாரியாக தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
தாக்கிய பின்னர் பொலிசார் வாகன சாரதியிடம் டிப்பரினை கொண்டு செல்லுமாறு தெரிவித்துள்ளதாகவும், டிப்பர்வாகன சாரதி தன்னால் இயலாத நிலையில் வைத்தியசாலைக்கு சென்று உள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக பொலீசார் கூறுகையில்;
தமக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும் தமக்கு தகவல் கிடைக்கப் பெற்றதை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொழுது மணலைக் கொட்டி விட்டு டிப்பர் தப்பிச் செல்ல முற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
தாம் சாரதி மீது தாக்குதல் நடத்தவில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *