நாட்டு மக்கள் இந்த வருடத்தின் (05/2022) இதுவரையில் மட்டும் ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 821 பேர் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர்.
இந்த விடயம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த 2021ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுடன் ஒப்பிடுகையில் 286 சதவீதம் அதிகமாகும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 25 ஆயிரத்து 224 பெண்களும் 13 ஆயிரத்து 441 ஆண்களும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மூலம் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளனர்.
இவர்களில் 12 ஆயிரத்து 701 பேர் குவைத்திற்கும், 11 ஆயிரம் பேர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும், ஆயிரத்து 754 பேர் தென் கொரியாவிற்கும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Be First to Comment