கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் திணறி வரும் இலங்கைக்கு இந்தியா பொருளாதார ரீதியிலும், மனிதாபிமான அடிப்படையிலும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்தியாவின் இந்த உதவிகளை வரலாறு பேச வேண்டும்.
இந்தியாவின் இந்த தன்னலமற்ற உதவியினை உலக நாடுகள் பலவும் வெகுவாகப் பாராட்டி வருகின்றன. மேலும், இந்தியாவின் இந்த செயல் இலங்கை – இந்தியா இடையேயான உறவுகளை வலுப்படுத்தும். கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கைக்கு இந்தியா செய்து வரும் உதவிகள் பொன் எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டும்.
இந்தியா இலங்கைக்கு பல கோடி ரூபாய் பொருளாதார உதவி செய்துள்ளது. அதேபோல மனிதாபிமான அடிப்படையில் இலங்கை மக்களுக்கு எரிபொருள், உணவுப் பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றையும் அனுப்பியுள்ளது.
இந்திய தரப்பிலிருந்து இதுவரை இலங்கைக்கு 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல், அரிசி, பால் பவுடர் மற்றும் மருந்துகள் போன்றவைகளை அனுப்பியுள்ளது. அதேபோல இலங்கைக்கு கடனுதவியையும் வழங்கியுள்ளது இந்தியா.
இந்தியாவின் தரப்பில் மனிதாபிமான அடிப்படையில் பொருள்கள் அனுப்பும் அதே வேளையில் இலங்கை அரசு அதன் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவர ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
(தினமணி)
Be First to Comment