இலங்கையின் மருத்துவ நெருக்கடியை சமாளிக்க உலக சுகாதார ஸ்தாபனம் பூரண ஆதரவை வழங்கும் என அந்த ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி வைத்தியர் அலகா சிங் உறுதியளித்தார்.
அலரிமாளகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தபோதே அவர் இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய சுகாதாரத் திட்டத்தின் கீழ், ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதத்திற்குள் மருந்துப் பற்றாக்குறையை தீர்க்க முடியும் என்று தான் நம்புவதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் ஊட்டச்சத்து தேவைகளை மேம்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் உறுதி பூண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Be First to Comment