காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் பின்னர் ஏற்பட்ட வன்முறையில் சேதப்படுத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றுக்கு இன்று (24) அறிவிக்கப்பட்டது.
கறுவாத்தோட்டம், நாரஹேன்பிட்டி, முல்லேரியா, பம்பலப்பிட்டி, பேலியகொட மற்றும் கிருலப்பனை ஆகிய பொலிஸ் நிலையங்களின் மூலம் மன்றுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
சேதமடைந்த வாகனங்களில் 17 பஸ்கள், 2 ஜீப்கள், 2 கார்கள், வான், அம்பியூலன்ஸ், 2 ஓட்டோக்கள் ஆகியவை உள்ளடங்குகின்றன. அவை குறித்து 25 வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சனத் நிஷாந்த பயணித்த வாகனத்துக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக அவரது சாரதி கறுவாத்தோட்டம் பொலிஸில் இன்று (24) முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Be First to Comment