யாழ்.நகர் மற்றம் நகரை அண்டிய பகுதிகளில் 6 வீடுகளில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்றய தினம் கைது செய்யப்பட்ட நிலையில் அவரின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளைக்கு உடந்தை மற்றும் கொள்ளையடித்த நகைகளை விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்களிலேயே மனைவி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
யாழ்.நகர் மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் சுமார் 6 வீடுகளில் குறித்த நபர் கொள்ளையடித்ததாக கூறப்படுகின்றது. கைது செய்யப்பட்ட நபரிடம் 30 பவுண் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நகைகள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் நகைக்கடைகளில் இருந்தே பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டிருக்கின்றது.
Be First to Comment