யாழ்.மாவட்டத்தில் உள்ள விற்பனை நிலையங்களில் சமையல் எரிவாயு சிலின்டர்கள் இல்லை என கூறப்படும் நிலையில், பதுக்கல் வியாபாரிகளிடம் தாராளமாக உள்ளதாகவும் 10 ஆயிரம் தொடக்கம் 12 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெற்றிருக்கின்றது. ஆனாலும் யாழ்.மாவட்டத்திலுள்ள விற்பனை நிலையங்களில் சமையல் எரிவாயு சிலின்டர்களை பெற முடியவில்லை.
இந்நிலையில் விநியோக இடங்களிலும் பல காரணங்கள் கூறப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில் யாழ்.மாவட்டத்தில் பதுக்கல் வியாபாரிகளிடம் தாராளமாக சமையல் எரிவாயு சிலின்டர்கள் உள்ளதாகவும், 10 ஆயிரம் தொடக்கம் 12 ஆயிரம் வரை விற்கப்படுவதாகவும்,
உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இந்த விடயம் பொறுப்புவாய்ந்த தரப்புக்களுக்கும் தொியவந்துள்ள நிலையில் மாவட்டத்திற்காக கொள்வனவு செய்யப்படும் சமையல் எரிவாயு சிலின்டர்களை பிரதேச செயலகங்களுக்கு ஊடாக விற்க முயற்சி எடுக்கப்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது.
Be First to Comment