கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் வந்திருக்கும் சூழலில், குரங்கு அம்மை குறித்த எச்சரிக்கை இப்போது வரத் தொடங்கி உள்ளது. உலகச் சுகாதார நிறுவனம் 20,மே அன்று வெளியிட்ட அறிக்கையின்படி, இதுவரை 80 பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 பேர் கண்காணிப்பில் இருக்கின்றனர். இந்தக் கண்காணிப்பு விரிவடையும்போது, குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.
குரங்கு அம்மை நோய் முதலில் ஐரோப்பாவில் பரவத் தொடங்கியது. முதலில் பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் சிலருக்கு இந்தத் தொற்று உறுதிசெய்யப்பட்டது. தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவிலும் இது பரவுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த நோய் கண்டம் விட்டு கண்டம் பரவத் தொடங்கி இருப்பதை இது உறுதி செய்கிறது.
Be First to Comment