பண்ணாகம் மெய்கண்டான் வித்தியாலயத்தின் அதிபர் அறை உடைக்கப்பட்டு ஒரு தொகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
பாடசாலை விடுமுறை தினத்தில் இடம்பெற்றுள்ள இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார்,
பொன்னாலை தெற்கை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.
Be First to Comment