பதுளை மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹபரு வாவியில் குளிப்பதற்காக சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹபருவௌ, கிரிமெடில்ல பிரதேசத்தை சேர்ந்த 45, 15, 10 வயதுகளையுடைய மூவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
குளிக்க சென்ற மூவரும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அவர்களை தேடிச் சென்றபோது குறித்த மூவரினது ஆடைகள் மட்டும் காணப்பட்டுள்ளன.
இந்நிலையில் பிரதேச மக்களின் உதவியுடன் குறித்த மூவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
பிரேதப் பரிசோதனைக்காக மூன்று சடலங்களும் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Be First to Comment