ஜப்பான் மொழி புலமையில்லாத, பாடசாலைகளை விட்டு விலகிய ஆயிரக் கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு எதிர்வரும் சில மாதங்களில் தொழில்வாய்ப்பு பெற்று தருமாறு, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார, இலங்கைக்கான ஜப்பானின் தூதுவராலயத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட தூதரக அதிகாரி Katsuki Kotara விடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தூதரக அதிகாரி Katsuki Kotara உள்ளிட்ட தூதரகத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் அமைச்சர் மனுச நாணயக்காரவுக்கும் இடையில் இன்று காலை நடைபெற்ற சந்திப்பிலேயே அமைச்சரால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் பாரியளவு தொழில்வாய்ப்புகள் காணப்பட்டாலும் மொழிப் பிரச்சினையால் இளைஞர்கள் ஜப்பான் செல்ல முன் வருவதில்லை . எனவே எதிர்வரும் காலங்களில் ஜப்பான் மொழி புலமையற்ற இளைஞர், யுவதிகளுக்கும் தொழில் வாய்ப்பை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதில் அளித்துள்ள தூதரக அதிகாரி Katsuki Kotara, ஜப்பானில் காணப்படும் அதிக தொழில் வாய்ப்புகளை இலங்கையர்களுக்கு வழங்க, ஜப்பான் எப்போதும் செயற்படும் என தெரிவித்துள்ளார்.
Be First to Comment