உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது.
உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
சமீபத்தில் அமெரிக்க வர்த்தக சபையுடனான சந்திப்பில் பேசிய உலக வங்கித் தலைவர், ரஷ்ய-உக்ரைன் போர் நிலைமை இதில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உணவு, எரிசக்தி மற்றும் உரங்களின் விலைகள் கடுமையாக உயர்வதால் உலகப் பொருளாதாரச் சரிவு மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், அவ்வாறானதொரு நிலைமையை தடுப்பது மிகவும் கடினமானது எனவும் உலக வங்கியின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய கொரோனா நோய்த் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே உலகின் நான்காவது பெரிய நாடான ஜேர்மனியின் பொருளாதாரம் மந்தமடைந்துள்ளதாக உலக வங்கியின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
Be First to Comment