Press "Enter" to skip to content

எரிபொருளுக்காக மாதாந்தம் 100 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக தொகை செலவிடப்படுகிறது – கஞ்சன

100 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகை எரிபொருளுக்காக மாதாந்தம் செலவிடப்படுவதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

சராசரியாக அலகொன்றுக்கான உற்பத்தி செலவீனம் 48 ரூபா 2 சதத்தால் அதிகரித்துள்ளதாக அவர் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையை மாற்றுவதற்கு ஏற்ற வகையில் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் புதுப்பிக்கதக்க சக்தி திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளது.

தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலையில், கைத்தொழில், அரச நிறுவனங்கள், வைத்தியசாலைகள், மற்றும் விருந்தகங்கள் என்பவற்றின் மின்கட்டணங்கள் மூன்று மடங்காக அதிகரிக்கக்கூடும்.

எனவே சூரிய சக்தி கட்டமைப்பு மூலம் குறித்த துறையினர் தமது மின்வலு கட்டணங்களை கட்டுப்படுத்த முடியும்.

இலங்கை மின்சார சபை, நீர் மற்றும் அனல்மின் நிலைய கட்டமைப்புக்கள் மூலம் தமது செலவீனங்களை குறைக்க முடியும்.

இந்தநிலையில், தொழில்நுட்ப மற்றும் நிதி என்பனவற்றை மதீப்பிடு செய்வதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட புதுப்பிக்கதக்க திட்டங்களை துரிதப்படுத்த முடியும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, 20 ஆயிரத்து 598 மெற்றிக் டன் டீசல் கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்திடம் கையிருப்பில் உள்ளதாகவும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஆயிரத்து 778 மெற்றிக் டன் சுப்பர் டீசல் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

42 ஆயிரத்து 750 மெற்றிக் டன் ஒக்டேன் 92 ரக பெற்றோலும், 6 ஆயிரத்து 579 மெற்றிக் டன் ஒக்டேன் 95 ரக பெற்றோலும், 3 ஆயிரத்து 104 மெற்றிக் டன் ஜெட் ஏ1 ரக எரிபொருளும் கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *