Press "Enter" to skip to content

சுகாதார ஊழியர்களின் ஊதியக் குறைப்பு இரத்து செய்யப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் -GMOA

ஒரு வாரத்திற்குள் சுகாதார ஊழியர்களின் சம்பளக் குறைப்பை முழுமையாக நீக்குவதற்கு சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுக்காவிட்டால், தீவிர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடியின் போது சுகாதார சேவைகள் சீர்குலைந்துள்ளதாகவும், சுகாதார ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினரான வைத்தியர் பிரசாத் கொலபகே தெரிவித்தார்.


ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடியதையடுத்து, இது தொடர்பில் அவருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, ஒரு வாரத்திற்குள் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாகவும், ஏற்கனவே சுகாதார சேவை ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த சம்பளத்தை வழங்குவதாக அவர் உறுதியளித்தாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சம்பளம் நிலுவை வழங்கப்படா விட்டால், அடுத்த வாரத்தின் பின்னர் தீவிர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு GMOA மத்திய குழு தீர்மானித்துள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *