Press "Enter" to skip to content

பெற்றோலுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் -இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

நாட்டில் தற்போது 90,000 மெற்றிக் தொன் பெற்றோல் இருப்பு உள்ளதாகவும், அந்தக் கையிருப்பு சுமார் 20 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் பொதுமக்கள் பெற்றோல் வாங்க வரிசையில் காத்திருக்க வேண்டாம் என கூட்டுத்தாபனம் கேட்டுக் கொண்டுள்ளது.
எனினும், டீசல் கையிருப்பு மிகவும் குறைவாக உள்ளதால், இந்த நாட்களில் பெற்றோல் நிலையங்களுக்கு டீசல் விநியோகம் மிகவும் குறைவாகவே உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை 40,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு எரிபொருள் தாங்கி ஒன்று மே 28 அல்லது 29 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதுவரை, தற்போதுள்ள இருப்புகள் அத்தியாவசியப் சேவைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும், தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போதியளவு பெற்றோல் இருந்த போதிலும், டீசலுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *