கடந்த சில நாட்களாக பேக்கரி உற்பத்தி பொருட்களின் விற்பனை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாகவே இவ்வாறு பேக்கரி உற்பத்தி பொருட்களின் விற்பனை குறைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால் உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் இத்தொழிலை நடத்தும் தொழிலதிபர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
ரொட்டி உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை உயர்வு, பேக்கரி பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் கடந்த சில மாதங்களாக விற்பனை சரிவடைந்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்
Be First to Comment