Press "Enter" to skip to content

விமலின் மனைவிக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவிற்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

போலியான தகவல்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் அவரை குற்றவாளியாக அறிவித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

மேலும், அவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

போலி ஆவணங்களை சமர்ப்பித்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இராஜதந்திர கடவுச்சீட்டு உள்ளிட்ட இரண்டு கடவுச்சீட்டுக்களை மோசடியாக பெற்றதாக சஷி வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்காக போலியான பெயர்கள் மற்றும் பிறந்த திகதிகளுடன் ஆவணங்களை சமர்ப்பித்தமை தொடர்பில் சஷி வீரவன்ச, முதன் முதலில் 2015 பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அதன் பின்னர், 2020 ஜூலையில், சஷி வீரவன்ச மன்றில் முன்னிலையாகாத நிலையில், கொழும்பு பிரதான நீதவான் சஷி வீரவன்சவுக்கு பிடியாணை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *