எரிபொருள் விநியோகம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று தற்போது எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் இடம்பெற்று வருகின்றது.
சூரிய சக்தி மூலம் மின்சாரம் பெறும் திட்டம் ஜூன் 01 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் எதிர்வரும் இரண்டு நாட்களில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Be First to Comment