மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் கடலட்டை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் கடலட்டை சார் தொழிலில் ஈடுபடுகின்றவர் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து தீர்வுகளை காணும் நோக்கிலான கலந்துரையாடல் ஒன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பூநகரி பிரதேச செயலக மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது பூநகரி பிரதேச செயலாளர், மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் கடற்றொழில் சார்ந்த திணைக்கள அதிகாரிகள் மற்றும் மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் கடற்றொழில் சார்ந்த சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.
தமிழகத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடி அவர்களிடம் தமிழக முதலமைச்சர் கச்சத்தீவை மீட்ப்பதற்குரிய பொருத்தமான நேரம் இதுவென கோரிக்கை விடுத்திருந்தார். எனவே இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய போதே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சர் அவர்களின் கருத்தை நான் மறுக்கா விட்டாலும் தமிழக முதலமைச்சரின் கருத்து சாத்தியமற்றது. இந்தியாவின் தமிழக மக்கள் முதலமைச்சருக்கு அழுத்தத்தை கொடுத்திருக்கலாம் அதற்காக முதலமைச்சர் அவர்கள் இவ்வாறான கருத்தை தெரிவித்திருக்கலாம். அதில் அவரின் கருத்து உண்மையாக இருக்குமாக இருந்தால் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியிருப்பார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒரு இணக்கப்பாடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழகத்தின் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு கச்சத்தீவால் யாருக்கு அதிக லாபம் கிடைக்கிறது என்று சட்டப்பூர்வமாக கடிதமொன்றை அனுப்ப உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
Be First to Comment