9 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறுமியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டுலுகம அல் கஸ்ஸாலி மகா வித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி கற்கும் பாத்திமா ஆயிஷா என்ற சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
குறித்த சிறுமி இன்று (27) காலை 10 மணியளவில் தனது வீட்டிலிருந்து 200 மீற்றர் தொலைவிலுள்ள கடையொன்றிற்கு கோழி இறைச்சி வாங்குவதற்காக சென்றுள்ளார்.
ஆனால் அவர் வீடு திரும்பவில்லை என்று அவரது தாயார் கூறுகிறார்.
காணாமல் போன சிறுமி நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் மூன்றாவது பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமி கடையை விட்டு வெளியேறுவது அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அதன்படி பொலிசார் தற்போது சிறுமியை தேடி வருகின்றனர்.
Be First to Comment