Press "Enter" to skip to content

முல்லைத்தீவு கஞ்சா கடத்திய கணவன் மனைவி கைது

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்துஜயன் கட்டு பகுதியில் கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி இருவரையும் ஒட்டுசுட்டான் பொலிஸார் நேற்று (27) மாலை கைதுசெய்துள்ளார்கள்.

ஓட்டுசுட்டான் தொட்டியடிப்பகுதியில் வீதிசோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட பொலிஸார் உந்துருளியில் சந்தேகமான முறையில் சென்ற கணவன் மனைவி இருவரையும் சோதனை செய்தபோது ஒரு கிலோ 360 கிராம் கேரளா கஞ்சாவினை கடத்தி செல்ல முற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதன்போது 40 அகவையுடய குடும்பபெண்டும் அவரது கணவரான 49 அகவையுடைய முத்துஜயன் கட்டினை சேர்ந்த இருவரையும் கைதுசெய்துள்ளதுடன் அவர்களை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி வாசல் தலத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *