யாழ்ப்பாண மாவட்டத்தில் பொது மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் இடம்பெற்றது
யாழ் மாவட்ட அரச அதிபர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த அனைத்து பிரதேச செயலர்கள் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் கடற்றொழில் திணைக்களம் மற்றும் ஏனைய துறை சார் அதிகாரிகள் கலந்து கொண்டனர்
யாழ்ப்பாண மாவட்டத்தில் பொது மக்கள் எதிர்நோக்கும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் மற்றும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் இன்றைய தினம் ஆராயப்பட்டதுடன் அதற்குரிய தீர்வும் கட்டப்பட்டது
Be First to Comment