வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று (30) ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
புதிய அமைச்சரவை பதவியேற்ற பின்னர் நடைபெறும் இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.
எனினும், தற்போது சர்வகட்சி அரசாங்கம் அமுலில் உள்ளதாகவும், இந்த வாரத்தில் மேலும் பல அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட 25 உறுப்பினர்களுக்கு அமைச்சரவை மட்டுப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதுவரை இராஜாங்க அமைச்சர்களோ அல்லது பிரதி அமைச்சர்களோ நியமிக்கப்படாத நிலையில், இந்த விடயம் இன்று அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 30 பேர் மாத்திரமே நியமிக்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், பதவிகள் எப்படி வழங்கப்படும் என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.
Be First to Comment