கச்சதீவை எந்தச் சந்தர்ப்பத்திலும் விட்டு கொடுக்க முடியாது – செல்வம் அடைக்கலநாதன்
By admin on May 30, 2022
கச்சத்தீவை எந்த சந்தர்ப்பத்திலும் விட்டு கொடுக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும்போது அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
கச்சத்தீவை மீட்பதற்கு இது சரியான சந்தர்ப்பம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளமையானது மனவருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
Be First to Comment