Press "Enter" to skip to content

சாணக்கியனின் பேச்சை கூ போட்டு குழப்பிய திருகோணமலை மக்கள்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசபுத்திரன் சாணக்கியன் உரையாற்றிய போது, காலிமுகத்திடலில் சிங்கள மக்களால் 50, நாட்களாக இடம்பெறும் போராட்டத்திற்கு தமிழர்களும் செல்ல வேண்டும் என்ற கருத்துப்பட பேசியபோது அங்கு இருந்த இளைஞர்களும், பொதுமக்களும் எழுந்து நின்று கூச்சல் போட்டு இங்கு அரசியல் பேசவேண்டாம் இது அஞ்சலி கூட்டம் பேச்சை நிறுத்து என கூ போட்டு எதிர்பு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பான நிலைமையேற்பட்டது.

இந்த சம்பவம் நேற்றையதினம் திருகோணமலையில் நடந்தது. கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்களிற்கான அஞ்சலி நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் மாலை 3.00 மணியளவில் உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள இந்து கலாச்சார மண்டபத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய இரா.சாணக்கியன், நிகழ்வு மேடையை தனது அரசியல் மேடையாக மாற்ற முயற்சிப்பதாக குறிப்பிட்டு, கலந்து கொண்டிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கூட்டத்திலிருந்த இளைஞர்கள் ‘கூ’ சத்தமெழுப்பி சாணக்கியனின் உரைக்கு இடையூறு ஏற்படுத்தினர். இதையடுத்து, அவர் உரையை இடையில் ஆற்றிவிட்டு சென்றார்.

அங்கு கலந்து கொண்ட திருகோணமலை தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவரிடம் இது தொடர்பாக  நிருபர் கேட்டபோது,  சாணாக்கியன் வழமையாக ஊடகங்களுக்கே பேசுவார், மக்களுக்காக நடிப்பார் கொழும்பில் சிங்களவர்கள் காலிமுகத்திடலில் ஏன் போராடுகின்றனர் என்பது ஊர் உலகத்துக்கு எல்லாம் தெரியும் அதை அஞ்சலி நிகழ்வில் பேசி தமது வழமையான நாடகத்தை காட்ட வெளிக்கிட்டதை மக்கள் ஏற்கவில்லை என கூறினார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *