தேயிலை தொழில் துறையினை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கு கொள்கை வகுப்பாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கொழும்பு தேயிலை வர்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கொள்கை வகுப்பாளர்கள் நிபுணர்களின் கருத்திற்கு மதிப்பளித்து அதற்கு ஏற்ற வகையில் செயல்பட வேண்டும்.
தேயிலை வர்த்தக சங்கத்தின் தொழில் பங்குதாரர்களாக செயல்படும் தேயிலை செடி வளர்ப்போர், உற்பத்தியாளர்கள், பெருந்தோட்ட நிறுவனங்கள், தரகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் ஆகியோர் இலங்கை தற்போது எதிர்கொள்ளும் நிலைமையினை கவலையுடன் நோக்குகின்றனர்.
சங்கத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் போது இடம்பெற்ற அசாதாரண நடவடிக்கைகள் மக்கள் மற்றும் வர்த்தக சமூகத்தை பெரிதும் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தேயிலை மூலம் கிடைக்கப்பெறும் அந்நிய செலாவணி கணிசமான அளவு குறைந்துள்ளது.
இலங்கை பணியாளர்களில் 10 சதவீதமானவர்கள் தேயிலை தொடர்பான தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களினால் சுமார் 130 கோடி அமெரிக்க டொலர்கள் வருடாந்தரம் அந்நிய செலாவணியாக கிடைப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக அதற்கு ஏற்றவகையில் தேயிலை தொழிலுடன் சம்பந்தப்பட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு மதிப்பளித்து அதற்கேற்ற வகையில் செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து கொழும்பு தேயிலை வர்த்தக சங்ககத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது
Be First to Comment