பலாலி – அந்தோனிபுரம் பகுதியில் கடந்த 26ம் திகதி கடத்தப்பட்ட 20 வயதான இளைஞன் நேற்றய தினம் வீடு திரும்பியிருக்கின்றார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கடந்த 26ம் திகதி பிற்பகல் 2 மணியளவல் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் மேற்படி இளைஞனை கடத்திச் சென்றதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
இதேவேளை கடத்தலுடன் தொடர்புடைய 3 பேரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதேவேளை கடத்தப்பட்டதாக கூறப்படும் 20 வயதான இளைஞன் கஞ்சா தருவதாக கூறி 3 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிய பின்னர் ஏமாற்றியுள்ளான்.
பின்னர் பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்த நிலையில் போலி கஞ்சாவை கொடுத்து ஏமாற்றிய நிலையில் ஆத்திரமடைந்த தரப்பு குறித்த இளைஞனை கடத்தி 3 லட்சம் ரூபா பணத்தை பெற்ற பின் விடுவித்துள்ளனர்.
என விசாரணைகளில் தொியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முடுக்கிவிட்டிருக்கின்றனர்.
Be First to Comment