Press "Enter" to skip to content

பிரித்தானியாவின் புதிய விசாத்திட்டத்தால் இலங்கையர்களுக்கு ஏமாற்றம்

பிரித்தானியாவுக்குள் வேலைவாய்பை பெற்றுக்கொள்ளும் வகையில் வெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு விசாஎனப்படும் புதிய நுழைவிசைவு திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரித்தானியபல்கலைக்கழங்களில் பட்டப்படிப்பை முடித்த வெளிநாட்டவர்கள் மீண்டும் தமது நாடுகளுக்கு திரும்பாமல் இரண்டு ஆண்டுகள் வரை தங்கி பணிபுரிவதை அனுமதிக்கும் வகையிலான மாற்றங்களும் இந்தத் திட்டத்தில் உள்ளடக்கபட்டுள்ளன.

பிரித்தானியாவின் புதிய விசாத்திட்டத்தால் இலங்கையர்களுக்கு ஏமாற்றம்

கடந்த ஐந்து ஆண்டுகளில் பட்டம் பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகள் அவர்கள் எந்த நாட்டில் பிறந்திருந்தாலும், புதிய திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

பட்டியலில் உள்வாங்கப்பட்ட நாடுகள்

 

இந்நிலையில், பிரித்தானியாவின் இந்த புதிய திட்டத்தில் பிரித்தானியா அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட முதற்கட்ட பட்டியலில் இலங்கைப் பல்கலைக்கழகங்கள் எவையும் உள்ளடக்கப்படவில்லை என்ற தகவல் இலங்கை மாணவர்கள் மத்தியில் ஏமாற்றத்தையளித்துள்ளது.

பிரித்தானியாவின் புதிய விசாத்திட்டத்தால் இலங்கையர்களுக்கு ஏமாற்றம்

குறித்த பட்டியலில் 20 அமெரிக்க பல்கலைக்கழகளும் கனடா, ஜப்பான், ஜெர்மனி, ஒஸ்ரேலியா, ஹொங்கொங், சீனா, சிங்கப்பூர், பிரான்ஸ், சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து பல்கலைக்கழகங்கள் மாத்திரம் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *