சீன அரசாங்கத்தால் 500 மில்லியன் யுவான் மானியமாக வழங்க உள்ளதாகவும், அதன் முதல் தொகுதி வெள்ளிக்கிழமை நாட்டிற்கு வரும் என கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை அதிகாரிகளால் அனுப்பப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக ,இலங்கைக்கு தேவையான வாழ்வாதார உதவிகளை வழங்க பிரதமர் லீ கெகியாங் நடவடிக்கை எடுத்துள்ளதாக சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சீன தூதுவர் Qi Zhenhong, 5 வகையான உதவிகள் தொடர்பில் விபரித்துள்ளார்.
அதாவது வேகமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அதிகளவான வெளிநாட்டு நேரடி முதலீடு, வர்த்தகம், இரு தரப்பு கடன் தீர்வு மற்றும் இலங்கைக்கான ஆதரவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு சீனாவிடம் இருந்து இலங்கைக்கு ஐந்து வழி முறையிலான உதவிகளை எடுத்துரைத்தார்.
கடந்த மே 24 அன்று அவர் தனது மனைவி ஜின் கியான் உடன் இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கு மூன்று நாள் பயணத்தை திருகோணமலையில் இருந்து தொடங்கினார், இவர்களுக்கு ஆளுநர் மற்றும் பல்வேறு தரப்பினரின் அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தூதுவர் மற்றும் அவரது மனைவி Jin Qian ,சீன வர்த்தக சபை பிரதிநிதிகளுடன் வணிக மன்றத்தில் சந்திப்பு இடம்பெற்றது. அதன்போது இலங்கை எதிர்கொண்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க, சீன அரசு அதிக முதலீட்டை வழங்கி ஊக்குவிக்க எண்ணி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பின் பின்னர் இருவரும் திருகோணமலை துறைமுகம் மற்றும் சீன குடாவிற்கு படகுமூலம் விஜயம் செய்தனர், மேலும் இலங்கை துறைமுக அதிகார சபையும் கிழக்கு மாகாணமும் துறைமுகம் தொடர்பான கைத்தொழில் மற்றும் சுற்றுலா துறைகளில் முதலீடு செய்ய சீனா தீர்மானித்துள்ளது. அத்துடன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உதவி செய்வதற்காக சீனாவின் யுனான் மாகாண மக்களால் வழங்கப்பட்ட நிவாரண பொதிகளை திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 5 ஆயிரத்து 200 பெறுமதியான உணவுப் பொதிகளை தூதுவர் வழங்கினார். மொத்தமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள 10 ஆயிரத்து 400 பின்தங்கிய குடும்பங்களுக்கு யுனான் மாகாண மக்களின் நன்கொடை நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டன.
அதன் பின்னர் தூதுவர் மற்றும் அவரது மனைவி இணைந்து கல்முனையில் உள்ள உள்ளூர் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் அன்பளிப்பு செய்தனர்.
மே 26 அன்று தூதுவர் ,காயங்கேனி தொல்பொருள் ஆராய்ச்சி நிலையத்திற்கு விஜயம் செய்தனர். கல்லடி பாலம், இலங்கையின் கிழக்கு கடற்கரை எப்போதும் கடல்சார் பட்டுப் பாதையில் முக்கிய வர்த்தக மையமாக காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தூதுவர் தனது விஜயத்தின் போது குச்சவெளி “பிச்சமல் “விகாரைக்கும் விஜயம் செய்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
Be First to Comment