யாழ். நகரில் உள்ள இரு பிரபல நகை கடைகளில் பட்டப்பகலில் உரிமையாளர்களை ஏமாற்றி கொள்ளையிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள ஓர் நகைக் கடையில் இரு இளைஞர்கள் மோதிரம் கொள்வனவு செய்வது போன்று பாசாங்கு செய்து வடிவங்களை பார்வையிட்ட சமயம் உரிமையாளர் ஓர் தட்டில் இருந்த அனைத்து மோதிரங்களையும் எடுத்து காண்பித்துள்ளார். இதன்போது அதில் உள்ள வடிவங்கள் திருப்தி இல்லை என இளைஞர்கள் கூறியமையினால் கடையின் உள்ளே வேறு சில மோதிரம் இருப்பதாகவும் அதனை எடுத்து வருவதாக்கூறி உரிமையாளர் கடையின் உள்ளே சென்றுள்ளார்.
இதன்போது கையில் இருந்த தட்டில் காணப்பட்ட அத்தனை மோதிரங்களையும் தூக்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பியோடியுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக் கிழமை இடம்பெற்ற இச் சம்பவத்தின்போது 9 பவுண் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இதேநேரம் நேற்றைய தினமும் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக்கடைக்குச் சென்ற பெண்கள் காப்பு கொள்வனவு செய்வது போன்று பாசாங்கு செய்த சமயம் கடை உரிமையாளர்கள் அசந்த நேரம் 5 காப்பை தூக்கிகொண்டு தப்பி ஓடியுள்ளனர். கடை பணியாளர்கள் நாலா புறமும் தேடியபோதும் களவாடியோடிய பெண்களை பிடிக்க முடியவில்லை.
Be First to Comment