மதுபோதையில் வீட்டுக்கு வந்த தந்தை 5 வயது மகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சம்பவம் கொடிகாமம் கெற்பேலி மேற்கு மிருசுவில் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.
சிறுமியின் தாயார் வீட்டில் இல்லாத சமயம் நிறைபோதையில் வீட்டுக்குவந்த தந்தை 5 வயதான சிறுமியை மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார்.
தந்தையின் தாக்குதலுக்கு இலக்கான சிறுமி கை முறிந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
Be First to Comment