காதலியின் இளவயது நண்பியான பாடசாலை மாணவியை வல்லுறவுக்குட்படுத்திய 24 வயது இளைஞர் ஒருவர், தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
10 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவி ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவியின் தாய், குடும்ப கஷ்டம் காரணமாக மத்திய கிழக்கு நாடொன்றுக்கு பணிப்பெண்ணாக தொழில் புரிந்துவருவதாக கூறப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட மாணவி தந்தை மற்றும் சகோதரனுடன் பாட்டியின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாடசாலை மாணவி வீட்டில் இல்லை என பாட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து மாணவி பொலிஸ் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளார்.
தலாவ பொலிஸார் மாணவியை பொறுப்பேற்று விசாரணை நடத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி தனது நெருங்கிய நண்பிக்கு காதலனை சந்திக்க வேண்டியிருந்ததால் அவருடன் சென்றபோது காதலன் , தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் மாணவி கூறியதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
Be First to Comment