பால் உற்பத்திப் பொருட்கள் மற்றும் பழ வகைகளுக்கான இறக்குமதி தீர்வைகளை அரசாங்கம் அதிகரித்துள்ளது.
முன்னர் தடை விதிக்கப்பட்டிருந்த 369 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு இன்று தளர்த்தப்பட்டது. இதையடுத்தே நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தீர்வையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால் உற்பத்தி சார்ந்த வெண்ணெய், யோக்கற் உள்ளிட்ட பொருட்களுக்கான தீர்வை 100வீதத்தால் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, 1000 ரூபாய் பெறுமதியான வெண்ணெய்கட்டிக்கு 1000 ரூபாய் வரியாக விதிக்கப்படுகின்றது.
இதேபோன்று, அப்பிள், திராட்சை பழங்கள் மீதான இறக்குமதி வரி ஒரு கிலோகிராமுக்கு 300 ரூபாயிலிருந்து 600 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் சொக்லேட் மற்றும் கொக்கோ கொண்ட பிற உணவு தயாரிப்புகளுக்கு 200வீதம் மேலதிக வரியை நிதி அமைச்சு விதித்துள்ளது.
Be First to Comment