யாழ்.தெல்லிப்பழையில் உள்ள வீடொன்றில் திருடிய குற்றச்சாட்டில் இருவர் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
தெல்லிப்பழையில் கடந்த 28ம் திகதி இரவு வீட்டில் எவரும் இல்லாத சமயத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தி வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள்
வீட்டிலிருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம், பெறுமதியான பொருட்கள், நகைகளை திருடிச் சென்றிருக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
அதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார் அளவெட்டி மற்றும் மாஹியப்பிட்டி பகுதிகளை சேர்ந்த இருவரைகைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Be First to Comment